2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

விஜய்ன் இறுதி படத்தின் பெயர் வெளியானது

Freelancer   / 2025 ஜனவரி 26 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினமான இன்று (26) தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தன் பின்னால் மக்கள் படை திரண்டிருக்க, நடிகர் விஜய் அவர்களுடன் உற்சாகம் பொங்க செல்பி எடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X