Editorial / 2026 மார்ச் 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் தவெக தலைவர் விஜய், த்ரிஷா கிருஷ்ணன் கபற்றி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அவர்களின் படங்கள் நமக்கானது வாழ்க்கை அல்ல என்கிற கேப்ஷன் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டு விக்ரம் பட் கூறியிருப்பதாவது,
விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆன்லைனில் இருக்கும் வதந்திகள் உண்மையா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவை உண்மையாக இருந்தால் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அண்மையில் சிறையில் இருந்தபோது தான் சுதந்திரத்தின் அருமையை புரிந்து கொண்டேன். கிடைக்காத ஒரு கப் டீக்காக ஏங்குவது. டூத்பேஸ்ட்டுக்கு சிரமப்படுவது. ஜாமீன் மனு வருவதற்காக மாலை 7 மணி வரை காத்திருப்பது. ஆனால் அதை விட மோசமான சிறை உள்ளது. அது தான் ஆன்மாவை சிறை வைப்பது. சந்தோஷத்தை சிறை வைப்பது. ஒரு உறவில் இருப்பவர்கள் அதில் சிக்கிக்கொள்ளும்போது உறவை தொடர வேண்டும் என்று சமூகம் வலியுறுத்துவதும் சிறை தான்.
இரண்டு பக்கமும் நான் இருந்திருக்கிறேன். நான் முட்டாளாக்கப்பட்டிருக்கிறேன். இன்னொருவரின் முட்டாளாகவும் இருந்திருக்கிறேன். என்ன சொல்ல வருகிறேன் என்றால் எனக்கு அந்த நிலை புரிகிறது, நான் அதில் இருந்திருக்கிறேன். மனித இதயம் தவறுகள் செய்யக் கூடியது. சந்தோஷம் கிடைக்கும் இடத்தை தேடிச் செல்லும். சந்தோஷத்திற்காக ஒன்று சேர்ந்தது, சந்தோஷத்தை தேடி வெளியே செல்கிறது.
காதல் இல்லாத உறவில் இருந்து வெளியே வருவேன், பணத்தை விட்டு வருவேன், சொத்தை விட்டு வருவேன். ஆனால் முக்கியமாக கவுரவம் மற்றும் கண்ணியத்துடன் வெளியே வருவேன். விஜய், த்ரிஷாவிடம் பாராட்டத்தக்க விஷயம் ஒன்றை கண்டேன். ஒரு விஷயம் இல்லாதது போன்று நடிக்காமல் இருப்பது கண்ணியம். ஏதோ பாவச்செயல் போன்று காதலை மறைக்காமல் இருப்பதும் கண்ணியம் தான்.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago