2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’வலிமை’ அப்டேட் தந்த யுவன்

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. 

படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த திரைப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த போதிலும் அப்டேட் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் பின்னணி இசை பணியைத்தான் தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் யுவனை கொண்டாடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X