2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விஜய் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக  ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கவுள்ளார்.

விஜய் இயக்கத்தில் ‘கரு’ மற்றும் ‘லக்‌ஷ்மி’ என இரண்டு படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளன.. ‘கரு’ படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, சாய் பல்லவின் முதல் தமிழ் படமாகவும் "கரு" அமைந்துள்ளது.

‘லக்‌ஷ்மி’ படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள். இரண்டு படங்களுக்குமே சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனான நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கத்தில் வெளியான ‘கிரீடம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ்  இசையமைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X