Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி தற்போது, `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரமல்லாது, `சீதக்காதி’, `சயீரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக `ஜுங்கா’வில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். `ஜுங்கா’ படத்தை ஏற்கெனவே, விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025