2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’விஜய் மோதிரம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், இத்திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு, மோதிரம் பரிசளித்துள்ள விஜய், அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மோதிரத்தில், “பிகில்” என அச்சிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சுமார் 400 பேர் வரை பணியாற்றுகிறார்களாம். அவர்கள் அனைவருக்குமே விஜய், மோதிரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது அன்புப் பரிசால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.

அந்த மகிழ்ச்சியை உடனடியாகப் பகிர்ந்து கொண்டுள்ள அந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரெபா மோனிக்கா ஜோன், “என் வாழ்க்கையில் முக்கிய ஞாபகமாக இது இருக்கும். விஜய்க்கு நன்றி. பிகில் திரைப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவத்தைக் கொடுத்தத திரைப்படம்” என, டுவிட்டரில் மோதிர புகைப்படத்தைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று, நடிகைகளான வர்ஷா பொல்லாம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .