Freelancer / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய் தேவரகொண்டா பயணித்த கார் தெலங்கானாவில் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிழும் அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இவருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையில் காதல் உறவு இருப்பதாகவும், அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் உலா வருகின்றன.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் உந்தவல்லி என்ற பகுதியில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.
ஆடுகளை ஏற்றி வந்த ட்ரக் ஒன்று, திடீரென பிரேக் போட்டபோது, விஜய் தேவரகொண்டா சென்ற காரும் மற்றொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
கார் சேதமடைந்த நிலையில் விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி நல்வாய்ப்பாக தப்பியதாக தெரிகிறது.
அதன் பின்னர் நண்பரின் காரில் விஜய் தேவரகொண்டா சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. R
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago