R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் விஜய் தேவரகொண்டா குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் நடிகை ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார்.
நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் என்று கேள்வி எழுப்பியதற்கு வெட்கத்தில் முகம் சிவந்தபடி அனைத்தயும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்தார்.

3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025