2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலையில் வைரமுத்து

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருதய நோய் பிரச்சனை காரணமாக வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ள அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே வைத்தியசாலையில் வந்துள்ளதாக தெரிவித்தார்.

நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய வைரமுத்து,  சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X