2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வைரலாகும் சாக்ஷி

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாக்ஷிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 3 தொடரில் பங்கேற்ற பின் சாக்ஷிக்கு ரசிகர்கள் பலம் கூடியது. தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார்.

கொரோனா காலத்தில் பல பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் அதிக நேரங்களை செலவிட்டு வந்தனர்.சாக்ஷி தனது ரசிகர்களுடன் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தகவல்களை பகிர்ந்தும் வந்தார்.

அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று பகிர்ந்து வந்த அவர், தற்போது கடற்கரையில் விளையாடும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X