2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வைரல் முத்தம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஆரம்பித்த இந்த காதல், விரைவில் திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் நயன் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் காதல் குறியீடுகளையும் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் பதிவு செய்த இந்த புகைப்படத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பம் தெரிவித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X