Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 31 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகிய தமிழ் மகனை தொடர்ந்து, இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் விஜய்.
அழகிய தமிழ் மகனை போலவே இந்தத் திரைப்படத்திலும் விஜய்க்கு இரண்டு வேடங்கள். கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, மைம் கோபி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
முதன்முதலாக விஜய், நெல்லை தமிழ் பேசி நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் செட் போட்டு நடந்து வருகிறது.
நேற்று முதல் சண்டை காட்சியில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து நெல்லைக்கு யூனிட் இடம்பெயர்ந்து அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.
விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஏற்கெனவே எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த எங்கவீட்டு பிள்ளை திரைப்படத்தை தழுவி எடுக்கப்படுவதாக ஆரம்பத்திலேயே செய்தி கசிந்திருந்தது.
இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். திரைப்படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், திரைப்படக் குழுவினரை விசாரித்தால் எங்க வீட்டு பிள்ளை என்பதுதான்; டைட்டீல் என்கிறார்கள்.
விரைவில் திரைப்படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று இயக்குநர் பரதனுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 minute ago
6 minute ago
12 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
12 minute ago
32 minute ago