George / 2016 மார்ச் 02 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
தொப்பியில சிங்கத்த பாரேன்
தோலுல ஸ்டாரா வாங்கும் போலீஸ்காரன்...
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படம் இரசிகர்களை ஏமாற்றியதையடுத்து அடுத்து நடித்துள்ள தெறி திரைப்படம் மூலம் இரசிகர்களை தெறிக்கவிட விஜய் - அட்லி - ஜீ.வி கூட்டணி தயாகியுள்ளது.
திரைப்படத்தில் 80 சதவீதமான பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட டீசர் இன்னும் யூடியுபில் தெறித்துக் கொண்டிருக்கும் நிலையில், விரைவில் தெறி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜித்து ஜில்லாடி என்ற பாடலை வெளியிடவுள்ளனர்.
ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த தலைவா திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்ததைப் போல் தெறி பாடலும் ஹிட்டாகும் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
பாடல் வெளியீடு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடவுள்ளதாக ஜீ.விக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago