2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்த நடிகை கொலை வழக்கில் கைது

Editorial   / 2025 மே 20 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.

ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்​தாண்டு ஜூலை மாதத்​தில் உள்​நாட்டு கலவரம் வெடித்​தது. இதில், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டுக்​காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், வெளி​நாட்​டுக்கு செல்ல டாக்​கா​வின் ஷாஜ​கான்​லால் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​த​போது நுஸ்​ரத் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டார். இதையடுத்​து,அவர் உள்​ளூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இதையடுத்​து, அவரின் வழக்​கறிஞர் ஜாமீன் கோரி நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​துள்​ளார். அவரது மனு மே 22-ம் திகதி விசா​ரணைக்கு வரவுள்​ளது.
நடிகை நுஸ்​ரத் பரியா தாய்​லாந்​துக்கு பயணிக்க திட்​ட​மிட்​டிருந்​த​தாக​வும் ஆனால், விமான நிலை​யத்​தில் அவர் போலீ​ஸா​ரால் தடுத்​து​நிறுத்​தப்​பட்டு கைது செய்​யப்​பட்​ட​தாக​வும் உள்​ளூர் ஊடகங்​கள் தெரி​வித்​துள்​ளன.

 

ஷேக் முஜிபுர் ரஹ்​மான் பற்​றிய 'முஜிப் தி மேக்​கிங் ஆப் ஏ நேஷன்' என்ற வாழ்க்கை வரலாற்​றுப் படத்​தில் வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வாக நடித்​ததற்​காக நுஸ்​ரத் பரியா நன்கு அறியப்​பட்​ட​வர். இந்த படம் பிரபல இயக்​குநர் ஷியாம் பெனகல் இயக்​கத்​தில் வெளி​யானது. இந்​தப் படத்தை வங்​கதேசம் மற்​றும் இந்​தியா இணைந்து தயாரித்தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X