Lenin Raj / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது குரல் மூலம் பின்னணி பாடகியாக ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.
பாடகியாக மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வெளியான ‘காயல்’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த பல கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்புகளை தேடியபோது நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடியதாகவும், சிலர் வாய்ப்புக்காக தவறான கோரிக்கைகள் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று பெரிய நிலைக்கு சென்றிருப்பேன். ஆனால், எனது திறமையில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தேன்” என கூறினார்.
மேலும், சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்தபோது தான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த இசையமைப்பாளர் ஸ்டுடியோவில் இரகசிய கேமராக்களை வைத்து பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களுக்கு ஆன்மீகப் போர்வை போர்த்தி நியாயப்படுத்தியதாகவும் அவர் கண்ணீருடன் குற்றச்சாட்டினார்.

இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி தற்போது துணி வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago