2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஸ்பைடர் மேனாக நடிக்கிறாரா தனுஷ்... வெளியான தகவல்!

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் ஒல்லியான உடலமைப்பை வைத்துக் கொண்டு ரவுடியாக நடித்து திரையில் அதகளம் செய்தார்.

மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஆடுகளம், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் பேசப்பட்டது.

ஒரு பக்கம் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார் தனுஷ். இதுவரை பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை ஆகிய நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். 

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். அதேபோல் ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். 

இந்தநிலையில், அடுத்த வருடம் ரிலீஸாகவுள்ள Avengers Secret Wars என்கிற படத்தில் தனுஷ் ஸ்பைடர் மேனாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

தற்போது அதுபற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .