2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

ஸ்ரீ லீலாவுக்கு திருமணமா?

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.

கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளார். தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி விளக்கிய அவர், "எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்.

இதற்கான அனைத்து திட்டமிடலையும் என் அம்மா கவனித்துக் கொண்டார்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது அவரின் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஸ்ரீ ரீலீலா ஜூன் 14 ஆம் தேதி தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X