2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ருதியின் கவர்ச்சி கஷ்டம்

George   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவர்ச்சியாக நடிப்பது மிகவும் கடினம் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். கவரச்சி தொடர்பில் மனம்திறக்கையிலேயே ஹ்ருதி இதனை கூறியுள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பதைவிட குடும்பப்பாங்கான வேடங்களில நடிப்பதுதான் கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைக்கேட்டால் கவர்ச்சியாக நடிப்பதுதான் கடினம் என்பேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

கவர்ச்சி உடைதரித்து மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலும் பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் நான், கவர்ச்சி, குடும்பப்பாங்கு என இரண்டுவிதமான வேடங்களையும் ஒரேமாதிரி மனநிலையுடன்தான் பார்க்கிறேன். ஒரேமாதிரி மனநிலையுடன்தான் நடிக்கிறேன் என்றும் ஸ்ருதி மேலும் கூறியுள்ளார்.

நடிகையாக பொலிவூட்டில் அறிமுகமான ஹ்ருதி, சல்மான்கான் நடித்த லக் திரைப்படத்தில் நீச்சல் உடையணிந்து நடித்து பொலிவூட் நடிகைகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். முதல் திரைப்படத்திலேயே அதிரடி பிரவேசம் செய்த ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து  திரைப்படத்துக்கு திரைப்படம் தனது கவர்ச்சி எல்லை அதிகப்படுத்தியதுடன்  சில தெலுங்குத் திரைப்படங்களில் ஆபாச எல்லைக்கும் சென்றார். 

இதனால், அவர் நடித்தத் திரைப்படங்களை தணிக்கைக் குழுவினர் மனம் போல் வெட்டித்தள்ளினர். ஆனால், அப்படி கத்தரிக்கப்பட்டு வெளியான திரைப்படங்களில் ஸ்ருதிஹாசன் ஆபாசமாக நடித்திருப்பதாககூட ஆந்திர மகளிர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தன.

அதன்பிறகு தனது கவர்ச்சியை ஓரளவு குறைத்துக்கொண்ட ஸ்ருதிஹாசன், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

பூஜை, புலி திரைப் படங்களுக்குப்பிறகு வேதாளம் திரைப்படத்தில் நடித்த ஸ்ருதி, அடுத்து சூர்யாவுடன் சிங்கம் 3 திரைப்படத்தில் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .