2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஹிந்தியில் பிரேமம்; நாயகனாக அர்ஜுன் கபூர்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பிரேமம்' படத்தின் ஹிந்தி உருவாக்கத்தில் அர்ஜுன் கபூர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான, மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி நாயகனாக நடித்த இந்தப் படத்தில், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.

கேரளாவைத் தாண்டி தமிழ் நாட்டிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. 4 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம், ஹிந்தியில் மறு ஆக்கம் செய்யப்படவுள்ளது.

அபிஷேக் கபூர் இயக்க இருக்கும் இந்தப் படத்தில், நிவின் பாலி பாத்திரத்தில் அர்ஜுன் கபூர் நடிக்கவுள்ளார்.

'பிரேமம்' ஏற்கனவே அதே பெயரில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதில், நிவின் பாலி பாத்திரத்தில் நாக சைதன்யா நடித்தார். சாய் பல்லவி பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் தெலுங்கிலும் நடித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X