J.A. George / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் உடன் ஜில்லா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.
இதைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக ரஜினியுடன் வரும் காட்சிகள் அனைத்திலும் சிக்சர் அடித்திருப்பார்.
இவர் தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பதிவிட்ட நிவேதா தாமஸ், " நான் என்னை தனிப்படுத்தி கொண்டேன், மருத்துவர்கள் கூறும் விஷங்களை மேற்கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் " என்று தெரிவித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago