2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மகனுக்காக மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ்ராஜ்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின்  “டூயட்”  திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான  நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப்பல மொழிகளிலும்  சிறந்த குணச்சித்திர நடிகராகவும் துணை நடிகராகவும் வலம்வருகின்றார்.

இவரது சிறந்த நடிப்பாற்றலினால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர்  பட இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் இவர் அவ்வபோது தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் லலிதா குமாரை காதலித்து கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முறைப்படி விவகாரத்துப் பெற்றனர். இதனையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் போனி வர்மாவை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  நேற்று முன்தினம்  தங்களுடைய 11 ஆவது திருமண விழாவை கொண்டாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்- போனி வர்மா ஜோடி செல்ல மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மோதிரம் அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த  நடிகர் பிரகாஷ் ராஜ் உங்கள் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று மகன் வேதாந்த் கூறியதாகவும் அதனால் மோதிரம் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் இதன் போது எடுக்கப்பட்ட  புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட  அவர்  அன்பான தோழியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருந்துவரும் போனி வர்மாவிற்கு நன்றியும் கூறியுள்ளார்.

இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .