2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

வெளியானது ‘வலிமை’ மோஷன் போஸ்டர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Editorial   / 2021 ஜூலை 11 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். 

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை தற்போது ஐதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு படத்தின் தலைப்பாக ‘வலிமை’ அறிவிக்கப்பட்டதற்கு பின், இப்படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை. 

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று(11) வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியான இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .