2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

நாட்டாமை நடிகருக்கு நடுராத்திரியில் சர்பிரைஸ்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராகவும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து தனக்கென நீங்கா இடம்பிடித்தவருமான நடிகர் விஜய்குமார் தன்னுடைய பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளார்.

அவருக்கு அவருடைய மகள்களான அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா ஆகிய 3 பேரும் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்குமார் கடந்த 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் நடிகர் சிவாஜிகணேசன் நடித்த “ஸ்ரீவள்ளி“ திரைப்படத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அடுத்து ஒருசில திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “அவள்ஒரு தொடர்கதை” திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

1994 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “நாட்டாமை” நடிகர் விஜய்குமாருக்கு இன்னொரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது.

இந்த நாட்டாமையை இன்றளவும் மறக்காத தமிழ் ரசிகர்கள் நடிகர் விஜயக்குமாரை சில நேரங்களில் நாட்டாமை என்றே அழைத்து வருவதும் பார்க்க முடிகிறது.

இந்தநிலையில் நடிகர் விஜயக்குமார் தன்னுடைய மகள்கள், பேரக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .