2022 ஜனவரி 20, வியாழக்கிழமை

ஒஸ்கார் பட்டியலில் நயன்தாரா படம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகையான நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஒஸ்கார் விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு அடுத்த வருடம் மார்ச் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

ஒஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தெரிவு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. 

இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’  மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றன.

இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’  திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கெனவே செய்தி வெளியாகியது. 

தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கியுள்ள‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X