2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

யோகிபாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமலின் ’களவாணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானவர்  ஓவியா.

அத்திரைப்படம் வெற்றிபெறவே அதனையடுத்து  முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம், காஞ்சனா 3 உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டானத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தற்போது அவர் ’ராஜபீமா’ மற்றும் ’சம்பவம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது யோகி பாபு உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் இத்திரைப் படத்தின் பூஜையானது  எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றே படப்பிடிப்பும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .