2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy   / 2021 ஜூலை 29 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் பாரதிராஜாவின்  அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். தற்போது பல  படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் போது சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து வைத்தியர்கள்  கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X