Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்துக்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார். இந்திரா காந்தி - கங்கனா ரணாவத் இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை. உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள்'' என்று கூறியுள்ளார்.
6 minute ago
9 minute ago
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
14 minute ago
24 minute ago