J.A. George / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சீரியல் மெட்டி ஒலி. தற்போது இந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சீரியலில் நான்காவது தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த வாரத்தில் உடல் நலக் குறைபாடு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 40 தான் ஆகிறது.
மஞ்சள் காமாலை நோய் காரணமாக விஜி இறந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை. குழந்தை இல்லாத காரணத்தினால் ட்ரீட்மென்ட் எடுத்து வந்த விஜி தற்கொலை செய்து கொண்டதாக பேசப்பட்டது.
இதுபற்றி மெட்டி ஒலி சீரியலில் கடைசி தங்கையாக நடித்த ரேவதி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். உண்மை என்னவென்று தெரியாமல் ஆளாளுக்கு ஏதேதோ பேசுகிறார்கள்.
விஜி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் மஞ்சக்காமாலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தன்னைப் பற்றியும் மஞ்சக்காமாலை பற்றியும் கவலைப்படாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவருடைய உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக கூறியுள்ளார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேட்டு என்னால் நம்ப முடியவில்லை. அதன் பிறகு அனைவரும் போன் செய்த பிறகுதான் நான் நம்பினேன் என கூறியுள்ளார்
42 minute ago
48 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
50 minute ago
2 hours ago