2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

’சூர்யா 40’ குறித்து சூப்பர் அட்பேட்

J.A. George   / 2021 ஜூலை 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூர்யா எதிர்வரும் 23ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு டி இமான் இசையமைத்து உள்ளார். பாண்டிராஜ் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது ’சூர்யா 40’படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை முடித்துவிட்டு சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .