2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

பிரபல நடிகருடன் 3ஆவது முறையாகவும் இணைந்த பிரியா

Ilango Bharathy   / 2021 ஜூலை 19 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் வெளியான ‘வாமனன்‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். 

இவர்  இங்கிலிஷ் விங்கிலிஷ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்.கே.ஜி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் அவர் புதிதாக  சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா ஆகியோரின்  நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் சுமோ ஆகிய படங்களில் சிவாவுடன் இணைந்து பணியாற்றி உள்ள பிரியா ஆனந்த், தற்போது 3ஆவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .