2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

சன்னி லியோனின் ஆபாச குத்தாட்டம்

Editorial   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதுரா:

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ஆபாச குத்தாட்ட பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சரேகமா மியூசிக் என்ற நிறுவனம் ‘மதுபன்’ என்ற  தலைப்பில் இசை வீடியோவை வெளியிட்டது. பாலிவுட் நடிகை கனிகா கபூர் மற்றும்  பாடகர் அரிந்தம் சக்ரவர்த்தி பாடிய இந்த பாடலில் சன்னி லியோனின் ஆட்டமும்  இடம்பெற்றுள்ளது.

கிருஷ்ணாவுக்கும், ராதாவுக்கும் இடையேயான காதலை மையமாக கொண்ட பாடலுக்கு சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் ஆடி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டார் என்று புகார் எழுந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த கோயில் பூஜாரிகள், சன்னி லியோனின் சமீபத்திய வீடியோ ஆல்பத்தை தடை செய்யக் கோரியுள்ளனர்.

  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா,சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வை புண்படுத்துகிறார்கள். ராதாவுக்கு கோவில்கள் இருக்கிறது. நாங்கள் ராதாவை வணங்குகிறோம். இசையமைப்பாளர் சாகிப் தோஷி அவர் மதம் தொடர்பாக பாடலை உருவாக்க வேண்டியது தானே. 3 நாட்களில் அந்த வீடியோவை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதையடுத்து மதுபன் பாடலின் வரிகள் மற்றும் தலைப்பை மாற்றுவதாக சரேகமா அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் புதுப்பாடல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .