2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் நேற்று இரவு திடீரென மும்பை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தில் இவ்வாண்டு  பெப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் மும்பை பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷில்பா செட்டி, விஜய் நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .