2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

ஏமாந்தது ஐஸ்வர்யா மட்டும் அல்ல விக்னேஷ் சிவனும் தான்

Janu   / 2023 மே 29 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டிடேயத்தில் மே 28ம் தேதி இரவு நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தது. தல தோனி ஆட்டத்தை பார்த்தே ஆக வேண்டும் என தமிழ்நாட்டில் இருந்து பலரும் குஜராத் கிளம்பினார்கள். மஞ்சள் கலர் டிசர்ட்டில் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தியபடியே அகமதாபாத் சென்றடைந்தார்கள்.

இறுதிப் போட்டியை காண ஆசையாக அகமதாபாத் சென்றார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அழகாக உடை அணிந்து ஸ்டேடியம் சென்றவருக்கு ஏமாற்றம் தான். ஐஸ்வர்யா மட்டும் அல்ல தல தோனி ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தான் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்றுவிட்டு சும்மா திரும்பியிருக்கிறார்.

ஐஸ்வர்யாவும், விக்னேஷ் சிவனும் இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .