2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆயுர்வேத சிகிச்சை

J.A. George   / 2022 நவம்பர் 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா,  சில வாரங்களுக்கு முன்பு தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, தனது தசை அழற்சி நோய்க்காக அமெரிக்க மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை மேற்கொண்டாராம். அதை இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்தார் என்கிறார்கள்.

இருப்பினும் அது பூரண குணமளிக்காத காரணத்தால் கேரள ஆயுர்வேத சிகிச்சையை சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி அவர் அந்த சிகிச்சையை மேற்கொண்டாராம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சமந்தா விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழல் வரும் என்றும் கூறுகிறார்கள்.

சமந்தா தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக 'குஷி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X