2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

Ilango Bharathy   / 2021 ஜூலை 09 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு  அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரிலுள்ள  வைத்தியசாலையொன்றில்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் குறித்த  வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளை  மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்  கடந்த 19 ஆம் திகதி  சென்னையிலிருந்து  மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு  மருத்துவப் பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதன் போது தான் நலமாக இருப்பதாகவும்,  மருத்துவ பரிசோதனைகள்  நல்லபடியாக முடிந்தன எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .