2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மாஸ் காட்டும் பகத் பாசில்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் லொறி சாரதியாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகம் டிசெம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .