2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

தரையில் நீதுசந்திரா

J.A. George   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நீதுசந்திரா அதன் பின்னர் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ ’ஆதிபகவன்’ வைகை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தமிழில் ஒரு படத்தில் நீத்து சந்திரா நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் அவரை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை நீதுசந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை நீது சந்திராவை தரதரவென இழுத்து செல்லும் காட்சி எந்த படத்திற்காக படமாக்கப்பட்டது என்பதை நீத்து சந்திரா குறிப்பிடவில்லை என்றாலும் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒன் டு ஒன்’என்ற படத்தின் படப்பிடிப்பு தான் இது என்று கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .