J.A. George / 2021 மார்ச் 17 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதைத்தொடர்ந்து இவர் மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ ஆகிய பிரபலமான பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிரகதி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளனர்.
அவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரகதி புடவை கட்டிக்கொண்டு கலக்கலாக புல்லட் ஓட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அவரைப் பாராட்டியதோடு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
50 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
8 hours ago
28 Oct 2025