2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

Freelancer   / 2021 நவம்பர் 28 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் ஹைதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்துக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X