Freelancer / 2021 ஜூன் 08 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், இம்மாதம் 18ஆம் திகத நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
வைநொட் ஸ்டூடியோஸ், மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், தனுஷுகு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளதோடு, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார்.
மேலும் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் செவ்வியொன்றில் ‘புஜ்ஜி’ மற்றும் ‘நேத்து’ஆகிய இரண்டு பிரபலமான பாடல்களும் இடம்பெறாது என தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் மொழிமாற்றம் கருதியே இந்த இரு பாடல்களை நீக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த இரண்டு பாடல்களும், படத்தில் இடம்பெறாது என, தெரிவிக்கப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதில் ‘புஜ்ஜி’ பாடலை அனிருத்தும், ‘நேத்து’ பாடலை தனுஷும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மா
6 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago