2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

விஜய் படத்துக்கு ’சி.எஸ்.கே.’ பெயரா?

Janu   / 2023 ஜூன் 06 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக திரிஷா வருகிறார். அர்ஜுன், கவுதம்மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது விஜய்க்கு 68-வது படம். இதில் நடிக்கும் இதர நடிகர் நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் பெயர் அடிபடுகிறது. இந்த படத்துக்கு சி.எஸ்.கே. என்ற பெயரை வைக்க பரிசீலனை நடப்பதாக இணைய தளங்களில் தீயாக தகவல் பரவி வருகிறது. சி.எஸ்.கே. என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை அழைக்கும் நிலையில் அதே பெயரை விஜய் படத்துக்கு வைக்க முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகி உள்ளது. இந்த பெயரை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .