2022 மே 20, வெள்ளிக்கிழமை

சின்ன திரையிலும் அட்ஜஸ்ட்மெண்ட்

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்படங்கள் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் நடிகைகள் தங்களுக்கென்று ஓர் இடத்தைப் பிடிப்பது சுலபமானது அல்ல. நடிப்பில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு அவ்வளவு எளிதாக சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே போல, நீடித்து நிலைப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை. போட்டி நிறைந்த உலகில், ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்வது பல ஆண்டுகளாக நடிகைகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும்.

அவ்வபோது தகாத முறையில் நடந்து கொள்வது பற்றி, பாலியல் துன்புறுத்தல் பற்றி எல்லாம் நடிகைகளிடம் இருந்து புகார் வந்தாலும், இந்த நிலை மாறவில்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக, கயல் சீரியல் நடிகை அதிர்ச்சியூட்டும்  ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

தன்னிடம் ‘அட்ஜஸ்ட்’ பண்ணச் சொல்லிக் கேட்டதாக அபி நவ்யா, கூறியுள்ளார்.

அபி நவ்யா, சின்னத்திரை ரசிகர்களிடையே பரிச்சயமான முகம் தான். செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதி என்ற பாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்ற பாத்திரத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .