2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

வீடு திரும்பியதும் ஆடியோ வெளியிட்ட அண்ணாத்த

J.A. George   / 2021 நவம்பர் 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த் கடந்த அக்டோபர் 28ஆம் திகதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். 

இரவு முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலி மற்றும் உடல் அசௌகரியம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டகாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக அவர் Hoote தளத்தில் வெளியிட்டுள்ள ஓடியோ பதிவில், "சிகிச்சை முடிந்தது. நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். 

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல எனது நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .