2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

“நான் துணிச்சலான பெண்”

J.A. George   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்போது ‘கிராண்ட்மா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு  விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தத் திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல திரைப்படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது.

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன்.

எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றாலும், சொந்த குரலில் பாடி நடிக்கவில்லை. அடுத்து ஒரு திரைப்படத்தில் பாடகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .