2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

விஜய் - அமலாபால் விவாகரத்து உறுதி!

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் விஜய், நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவாகரத்து செய்யவுள்ளமை உறுதியாகியிருக்கிறது. இந்த தகவலை இயக்குநர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியிருக்கிறார்.

வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்தை சேர்ந்த நடிகை அமலாபால். விக்ரம் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தில் அனுஷ்கா, அமலாபால் இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர்.  

அந்த திரைப்படத்தை இயக்கி வந்த நேரத்தில் இயக்குநர் விஜய் - அமலாபாலுக்கிடையே காதல் உருவானது.

அதையடுத்து விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா திரைப்படத்திலும் அமலாபால் நாயகியாக நடித்தார். பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிக்க வேண்டாம் என்று விஜய் குடும்பத்தில் கூறியுள்ளனர். எனினும், திரைப்படங்களில் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார் அமலாபால்.

அண்மையில், அம்மா கணக்கு... திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தனுஷுடன் வட சென்னை திரைப்படத்தில் நடிக்கிறார். இது இயக்குநர் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில், இயக்குநர் விஜய்-அமலாபாலுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்தி பரவி, வைரலானது. இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது.  ஆனால் இந்த செய்தி சம்பந்தமாக இயக்குநர் விஜய், அமலாபால் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பும் வெளியிடவில்லை.

அதேசமயம் உண்மையா என்று விளக்கவில்லை. அதனால் இதுவும் ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இயக்குநர் விஜய்யின் தந்தை தெரிவித்துள்ளதையடுத்து, விஜய்- அமலாபால் இடையேயான திருமண உறவு இரண்டு ஆண்டுகளிலேயே நிறைவுக்கு வரவுள்ளமை உறுதியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .