2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நிர்வாண வீடியோ தொடர்பில் கேள்வி கேட்டவரை விளாசிய ஆப்தே

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக இணணயதளங்களில் 'Parched' என்ற பொலிவூட்  திரைப்படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர்களின் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தேவிடம்  ஊடகவியலாளர் ஒருவர் இந்த நிர்வாண வீடியோ குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய ராதிகா ஆப்தே, "மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக உள்ளது. சர்ச்சைகளை வேறு யாரும் உருவாக்குவதில்லை.  உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறீர்கள்

நான் ஒரு நடிகை. ஒரு திரைப்படத்துக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியது எனது பணி. ஒரு திரைப்படம் நன்றாக வருவதற்கு என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் குறுகிய கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவை கவனித்து பாருங்கள். அவ்வாறு பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வி உங்களிடம் இருந்து எழுந்திருக்காது.

தங்களுடைய உடலை அவமானமாக கருதுபவர்களே அடுத்தவர்கள் உடலை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதற்கு பதிலாக உங்களை நீங்களே கண்ணாடி முன்பு நிர்வாணமாக நின்று பார்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாம் இதுகுறித்து பேசலாம்' என்று அனல்பறக்க பேசியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .