2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நயன்தாரவுடனான காதலை வெளிப்படுத்தும் சிம்புவின் 'மன்மதன் - 2'

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


வேட்டை மன்னன், வாலு, போடா போடி ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு, தனது அடுத்த திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளாராம். தனது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான மன்மதன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே அவரது திரைப்படம் அமையவள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திரைப்படத்திற்கான கதையினை எழுதிக்கொண்டிருக்கும் சிம்பு, அதற்கு 'மன்மதன் - 2' என பெயரிட்டுள்ளாராம்.

சிம்புவின் முதல் காதல் தோல்வியில் முடிந்த நிலையில் அவரது காதல் அனுபவத்தைத்தான் மன்மதன் எனும் திரைப்படமாக எடுத்தார் என்று அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின்னர் சிம்பு நயன்தாராவை காதலித்ததும் அவர்களது காதல் விரைவிலேயே முறிந்துவிட்ட நிலையில் இருவரும் பிரிந்ததும் அனைவரும் அறிந்ததே. நயன்தாராவுடனான காதல் தோல்வியின் போது தனது இரண்டாவது காதல் அனுபவத்தை திரைப்படமாக எடுப்பேன் எனவும் சிம்பு அறிவித்திருந்தார்.

சிம்புவின் கடைசி காதலியான நயன்தாராவும் அவரது இரண்டாவது காதலில் தோல்வியடைந்த பின்னர்தான் சிம்பு அவரது புதிய திரைப்படத்துக்கான கதையை எழுத ஆர்ம்பித்துள்ளார் என்று தெரியவருகிறது. எனவே மன்மதன் - 2இல் சிம்புவின் இரண்டாவது காதலியின் கதாபாத்திரமும் வரலாம் என்பது தென்னிந்திய திரையுலகச் செய்தியாகும்.

மன்மதன் - 2 திரைப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைப்போம் என்ற முடிவில் உள்ளதாம் சிம்பு தரப்பு. அனுஷ்கா ஏற்கனவே சிம்புவுடன் வானம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் த்ரிஷா, தமன்னா, சிந்து துலானி, மந்திரா பேடி ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்கவிருக்கிறார்களாம். சிம்புவின் நண்பனாக சந்தானம் கதை முழுக்க வலம் வருகிறாராம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X