Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னுடைய வயதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சினிமாவுக்கு வந்து 8 வருடங்கள்தான் ஆகின்றன. இன்னும் சாதிக்கவேண்டியவை நிறையவே இருக்கு. ஆகையினால் இப்போதைக்கு திருமணம் பற்றி சிந்திக்க மாட்டேன். இந்தியாவில் நம்பர் 1 நடிகை என்று பெயர் வாங்கிய பின்னர்தான் திருமணம் பற்றி சிந்திப்பேன் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
திருமண வயதை தாண்டிய பின்னரும் திருமணம் செய்துகொள்ளவில்லையா என அனைவரும் கேட்பதால் கடுப்பாகிய திரிஷா மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
ஹிந்தியில் காட்டா மீட்டா தோல்விப்படம் என பலரும் பிரசாரம் செய்கிறார்கள். படத்தில் நடிப்பது மட்டும்தான் என் வேலை. அப்படத்தினை வெற்றிபெற வைப்பது என் வேலையில்லை. இப்பொழுதுதான் என் கைவசம் தரமான படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. மன்மதன் அம்பு படம் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்லும். அதேபோல் ஹிந்தி திரையுலகிலும் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மீண்டும் ஹிந்தியில் நடிப்பேன்.
அதேபோல் தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவேன். அதன் மூலம் இந்தியாவில் நிச்சயமாக நம்பர் 1 நடிகை என்ற பெயர் எடுப்பேன். அதன் பின்னர்தான் என்னுடைய திருமணம் பற்றி சிந்திப்பேன் என திரிஷா கடுப்பாக பதில் கூறியிருக்கிறார்.
kanniyappen jeyatheeswaren Wednesday, 20 October 2010 04:08 AM
அப்போ ரொம்ப நாளாகும் அதுக்குள்ளே எனக்கு பேரன் பொறந்திடுவானே டார்லிங் ... பாவம் நீங்க நல்ல மாப்பிள்ளையை மிஸ் பண்ண போறீங்க ...
கானா ஜெயதீஸ்வரன்
நெதர்லாண்ட்ஸ்
Reply : 1 0
xlntgson Wednesday, 20 October 2010 08:34 PM
இது ஆணவத்தின் அறிகுறியாக ஆகிவிடாமல். கிழவி ஆகித்தான் கல்யாணம் முடிக்கவேண்டியதிருக்கும்! இவருக்கும் மு.முரளிதரன் மனைவிக்கும் ஓர் உருவ ஒற்றுமை தெரிகிறதே, இருவரும் உறவினர்களா?
Reply : 0 0
xlntgson Thursday, 21 October 2010 09:08 PM
வயது போய்தான் கல்யாணம் முடிக்கவேண்டியதிருக்கும் அதனால் தான் நடிகைகள் வயதை கூறுவதில்லை. என்றும் பதினாறு! இவருடைய உருவ ஒற்றுமையைப் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அது நீக்கப்பட்டுவிட்டதா? இவர் முத்தையா முரளிதரன் மனைவியின் உருவ ஒற்றுமையுடன் திகழ்கிறார், இல்லையா, அவரும் இவரும் உறவினர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025