2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஷாலுக்கான த்ரிஷாவின் 10 நாட்கள்...

Menaka Mookandi   / 2012 மார்ச் 02 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகை த்ரிஷாவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்பே இல்லை என்று ஒருபுறம் செய்திகள் வெளியாகிக்கொண்டுள்ள நிலையில், மறுபுறம் அவரது திருமணம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இரண்டு விடயங்களையுமே பொய்யாக்கி வருகிறார் த்ரிஷா. இப்போது அவர் இரண்டு பெரிய திரைபடங்களில் பிஸியாகியுள்ளாராம். ஒரு படம் தெலுங்கில்  ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக. மறுபுறம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக.

வுப்ஷாலுடன் த்ரிஷா ஜோடி சேரும் திரைப்படத்தின் பெயர் சமரன். இரண்டு திரைப்படங்களும் வௌ;வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவர் இவ்விரு திரைப்படங்களில் படப்பிடிப்புக்களையும் த்ரிஷா எவ்வாறு சமாளிக்கிறார்?  என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், 'இது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் திரைப்படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு திரைப்படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர். காரணம், அழகை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதேநேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார் த்ரிஷா.


You May Also Like

  Comments - 0

  • haleemraja Tuesday, 06 March 2012 02:45 PM

    மேக்கப் இல்லாட்டி பேய்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X