2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிரஞ்சீவியின் 150ஆவது படத்தினை இயக்கும் ஷங்கர்

A.P.Mathan   / 2012 ஜனவரி 27 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் என்ன என்பதுதான் தற்போதைய மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. எந்திரன் என்ற பிரம்மாண்ட படைப்பினை வழங்கிய ஷங்கரின் அண்மைய ரீமேக் படம் நண்பனும் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் பற்றிய செய்திகள் இப்பொழுது கசியத் தொடங்கியிருக்கின்றன.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்கின்ற சிரஞ்சீவி இப்பொழுது அரசியலிலும் பிரபல்யம் அடைந்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். அவரது 150ஆவது படத்தினை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பன் படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஸ்நேஹித்துடு' படத்தின் இசை வெளியீடு அண்மையில் ஹைதராபாத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பதிதியாக சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கலந்துகொண்டிருந்தார். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக இப்பொழுது இருக்கிறார்.

ஷங்கரைப்பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள ராம் சரண் தனது தந்தையின் 150ஆவது படத்தினை இயக்கும் பொறுப்பை ஷங்கரிடம் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படத்தினை சிரஞ்சீவியின் மகனான ராம் சரணே தயாரிக்கவுள்ளாராம்.

ஷங்கரின் வழமையான பாணியில் சிரஞ்சீவியின் 150ஆவது படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்ட சண்டைகள், ஊழல் ஒழிப்பு போன்ற விடயங்கள் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்குமாம்.


 


You May Also Like

  Comments - 0

  • kannan Monday, 20 February 2012 10:30 PM

    ப்ளீஸ் வேண்டாம் ஷங்கர்ஜி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X